நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்து டுவா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயப் பிரச்சினைக்கு ஆர்ஓஎஸ் நிரந்தர தீர்வை வழங்கியுள்ளது: டத்தோஸ்ரீ தனேந்திரன்

கோலாலம்பூர்:

சுங்கைப்பட்டாணி பத்து டுவா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயப் பிரச்சினைக்கு ஆர்ஓஎஸ் நிரந்தர தீர்வை வழங்கியுள்ளது.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் கூறினார்.

சுங்கைப்பட்டாணி பத்து டுவா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் 100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை கொண்டதாகும்.

கிட்டத்தட்ட 3 டிவிஷன் தோட்டங்களை பிரதிதிக்கும் ஆலயம் இதுவாகும்.

இவ்வாலயம் சிறப்பான முறையில் கட்டி கும்பாபிஷேகம் செய்யப்பட்டு ஆலயம் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆலயத்தின் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆலயத்தின் பதிவு ரத்தனதற்கு கடந்தாண்டு கூட்ட அறிக்கையை சமர்பிக்காததே முக்கிய காரணமாகும்.

இதனால் இந்த விவகாரம் தொடர்பில் ஆர்ஓஎஸ்சிடம் முறையாக மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் ஆர்ஓஎஸ்சிடம் இருந்து ஆலய நிர்வாகத்திற்கு ஒரு கடிதம் வழங்கியது.

அக்கடிதத்தில் ஆலயத்தின் பதிவு ரத்தானதற்கு நிரந்தர தீர்வை ஆர்ஓஎஸ் வழங்கி உள்ளது.

இதனால் ஆலயத் தலைவர் செல்லதுரை தலைமையில் ஆலயம் தொடர்ந்து செயல்படும்.

இவ்வேளையில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோனுக்கு ஆர்ஓஎஸ்க்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு ஆலயத்தை வழிநடத்தி செல்ல வேண்டும் என டத்தோஸ்ரீ தனேந்திரன் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக ஆலய கும்பாபிஷேகம் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் முக்கிய காரணமாக இருந்தார்.

இப்போது ஆர்ஓஎஸ் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும் அவர் தான் உதவியாக இருந்தார்.

ஆக ஆலய நிர்வாகம் சார்பில் அவருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக ஆலயத் தலைவர் செல்லதுரை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset