நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய  திறன் சான்றிதழ் வாயிலாக திவேட் பயிற்சிக்கான புரட்சி தொடரும்: ஸ்டீவன் சிம்

கோலாலம்பூர்:

மலேசிய  திறன் சான்றிதழ் வாயிலாக திவேட் பயிற்சிக்கான புரட்சிகள் தொடரும்.

மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை கூறினார்.

திவேட் பயிற்சி சாதாரண கல்வித் திட்டத்திற்கு அப்பாற்பட்டது.

இதனால் மலேசிய திறன் சான்றிதழ் திட்டம் 100 தொழில்துறை தலைவர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படும்.

தொழில் புரட்சி 4.0 என்பது தான் திவேட் கல்வித் திட்டமாகும்.

வேலைக்கான நடைமுறைகளை கற்றுக்கொள்ள வைப்பதன் மூலம் தொழில் வர்கத்தை உண்மையான உலகத்திற்கு தயார் செய்யப்படுகிறது.

கோலாலம்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற தேசிய பொருளாதார மாநாட்டில் பேசிய ஸ்டீவன் சிம் இவ்வாறு கூறினார்.

நாட்டில் திவேட் தரத்தை மேம்படுத்துவதற்காக மலேசிய  திறன் சான்றிதழ் நிலைகளை 6, 7,  8 ஆக உயர்த்தப்படும்.

இதறகாக  தேசிய திறன் மேம்பாட்டுச் சட்டம் 2006-ல் ஒரு திருத்தத்தை முன்வைக்க அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த நிலைகள் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெறுவதற்குச் சமம் என்று அவர் கூறினார்.

பயிறசியாளர்கள் நிலை 5 அதாவது  டிப்ளமோவில் சிக்கிக் கொள்ளாமல், உயர் மட்டங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதை அமைச்சு உறுதி செய்ய விரும்புகிறது.

இந்த மசோதா இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அவர் கூறினார்.

தேசிய வர்த்தக தொழிலியல் சம்மேளத்தின் தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset