நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முகவரி அமைப்பு பொருளாதாரத்தையும் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும்: ஃபஹ்மி ஃபாட்சில் 

கோலாலம்பூர்:

தேசிய முகவரி அமைப்பு (NAS) நாட்டின் பொருளாதாரத்தையும் வேலை வாய்ப்பையும் அதிகரிக்கும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார். 

நாடு முழுவதும் 12 மில்லியனுக்கும் அதிகமான முகவரிகள் தேசிய முகவரி அமைப்பில் இணைக்கப்படும். 

இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2,000 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். 

அதோடு, RM2 பில்லியன் மதிப்பில் பொருளாதார வளர்ச்சி வாய்ப்பை உருவாக்கும் சாத்தியம் இருப்பதையும் ஃபஹ்மி சுட்டிக் காட்டினார். 

முகவரி தொடர்பான நடவடிக்கைகளுடன் தொடர்புடைய துறைகளை உள்ளடக்கிய ஒரு பகுப்பாய்வில், மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் (MCMC) இது குறித்து குறிப்பிட்டுள்ளது.

இது பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் முன்வைத்த ஒரு முன்னோடித் திட்டம் என்றும் ஃபஹ்மி தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset