நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செந்தமிழ் விழா போன்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான நிகழ்ச்சிக்கு கல்வியமைச்சு மானியம் வழங்க வேண்டும்: டத்தோ சிவக்குமார்

பத்துகேவ்ஸ்:

செந்தமிழ் விழா போன்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான நிகழ்ச்சிக்கு கல்வியமைச்சு மானியம் வழங்க வேண்டும்.

மஹிமா தலைவரும் டிஎஸ்கே குழுமத்தின் தலைவருமான டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.

கோம்பாக் மாவட்ட அளவிலான செந்தமிழ் விழா பத்துமலை தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது.

இந்த விழாவை தொடக்கி வைத்ததில் மகிழ்ச்சியளிக்கிறது.

மேலும் அதிகமான மாணவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டது பெருமையளிக்கிறது.

மாபெரும் அளவில் இவ் விழா நடத்தப்படுகிறது. 

பல சிரமங்களுக்கு மத்தியில் இதுபோன்ற விழாக்கள் நடைபெறுகிறது.

இதுபோன்ற விழாக்கள் மாணவர்களுக்கு பெரும் பயனாக உள்ளது.

குறிப்பாக தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்களின் திறமைகளை இதுபோன்ற விழாக்களின் வாயிலாக வெளிப்படுத்துகின்றனர்.

ஆக இதுபோன்ற விழாக்களுக்கு கல்வியமைச்சு முழு ஆதரவு கொடுக்கும்.

கல்வியமைச்சு இதுபோன்ற விழாக்களுக்கு மானியம் வழங்க வேண்டும்.

இதன் மூலம் இதுபோன்ற விழாக்கள் பரவலாக நடத்தப்படும் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.

முன்னதாக  கல்வியமைச்சின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பிய மஹிமா தலைவர் டத்தோ சிவக்குமார் இவ்விழா வெற்றி பெற 10,000 ரிங்கிட் மானியம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் தமிழ்மொழி உதவி இயக்குனர் வீ. செங்குட்டுவன், பத்துமலை தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் சரஸ்வதி உட்பட பலர் இன்றைய விழாவில் கலந்து கொண்டனர்.

 

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset