
செய்திகள் மலேசியா
அனைவரும் கோலாலம்பூர் நகரத்தின் தூய்மையைப் பராமரிக்க வேண்டும்: ஜலிஹா முஸ்தாஃபா
கோலாலம்பூர்:
அரசு நிறுவனங்கள், பொது மக்கள் என அனைவரும் கோலாலம்பூர் நகரத்தின் தூய்மையைப் பராமரிப்பதில் அக்கறை கொள்ள வேண்டும் என்று பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தாஃபா தெரிவித்தார்.
கோலாலம்பூர் மாநகர மன்றத்தின் தூய்மையைப் பராமரிப்பது மாநகர மன்றத்தின் பொறுப்பு மட்டுமல்ல. மாறாக அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம் என்று ஜலிஹா சுட்டிக் காட்டினார்.
பேரரசர் சுல்தான் இப்ராஹிம் Gallagher சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மை குறைப்பாடு இருப்பதாக தெரிவித்ததையடுத்து கோலாலம்பூர் மாநகர மன்றம், DBKL உடனடியாக அவ்விடத்திற்குச் சென்று துப்புரவுப் பணிகளை மேற்கொண்டது என்று ஜலிஹா தெரிவித்தார்.
தூய்மை தொடர்பான திட்டங்களுக்கு கோலாலம்பூர் மாநகர மன்றம்வ் DBKL உண்மையில் ஒரு குறிப்பிட்ட திட்டத்தைக் கொண்டுள்ளது என்று தாம் உறுதியாக நம்புவதாக ஜலிஹா தெரிவித்தார்
எனவே நமது நகரம் சுத்தமாக இருப்பதை உறுதி செய்வதில் எந்தப் பகுதியையும் நாம் விட்டுவிட முடியாது என்று என்று அவர் கூறினார்.
இன்று கூட்டாட்சி பிரதேச அளவிலான 2025-ஆம் ஆண்டின் காலநிலை மாற்றம் மற்றும் பசுமை எரிசக்தி தலைமைத்துவ திட்டத்தின் (IKLIM) தொடக்க விழாவிற்கு பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 17, 2025, 5:21 pm
2026-ஆம் ஆண்டு ஜனவரி முதல் இளைஞர் வயது வரம்பு 30 ஆகக் குறைப்பு: ஹன்னா இயோ
July 17, 2025, 4:48 pm
பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் பலாத்காரம் புரிந்த இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்
July 17, 2025, 4:36 pm
மலேசிய திறன் சான்றிதழ் வாயிலாக திவேட் பயிற்சிக்கான புரட்சி தொடரும்: ஸ்டீவன் சிம்
July 17, 2025, 4:01 pm
கிளந்தானில் ஓரின சேர்க்கை (Gay) விருந்து: மாநில மரியாதையை களங்கப்படுத்திய செயல்: அம்னோ
July 17, 2025, 3:52 pm