
செய்திகள் மலேசியா
மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் 5 லட்சம் ரிங்கிட் நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால்
கோலாலம்பூர்:
மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் 5 லட்சம் ரிங்கிட் நிதி வழஙகப்பட்டது.
மலேசிய இஸ்லாமியக் கல்வி அறவாரியத்தின் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் இதனை கூறினார்.
மலாயா பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வியல் துறையில் கவிக்கோ அப்துர் ரஹ்மான் நினைவு ஆய்வு இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.
ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை, இஸ்லாமியக் கல்வி அறவாரியம் முயற்சியில் இந்த ஆய்வு இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளையின் வாயிலாக 5 லட்சம் ரிங்கிட் நிதி இந்திய ஆய்வியல் துறைக்கு வழங்கப்பட்டது.
தமிழ்மொழியிலும் தமிழ் இலக்கியத்திலும் ஒரு பயன்பாட்டை ஏற்படுத்த வேண்டும்.
இதன் அடிப்படையில் இந்திய ஆய்வியல் பிரிவில் உள்ள மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
இதனை இலக்காக கொண்டே இந் நிதி வழங்கப்பட்டது.
ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை எதற்காக நிறுவப்பட்டதோ அதற்கான நடவடிக்கைகள் தொடரும் என்று டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் கூறினார்.
முன்னதாக இந்த நிதி ஆய்வு செய்யக்கூடிய மாணவர்கள், படைப்பாளிகளின் பொருளாதார சிக்கலை தீர்க்கும்.
ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளையின் தலைவர் முஹம்மத் முஸ்தபா இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 17, 2025, 5:21 pm
2026-ஆம் ஆண்டு ஜனவரி முதல் இளைஞர் வயது வரம்பு 30 ஆகக் குறைப்பு: ஹன்னா இயோ
July 17, 2025, 4:48 pm
பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் பலாத்காரம் புரிந்த இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்
July 17, 2025, 4:36 pm
மலேசிய திறன் சான்றிதழ் வாயிலாக திவேட் பயிற்சிக்கான புரட்சி தொடரும்: ஸ்டீவன் சிம்
July 17, 2025, 4:35 pm
அனைவரும் கோலாலம்பூர் நகரத்தின் தூய்மையைப் பராமரிக்க வேண்டும்: ஜலிஹா முஸ்தாஃபா
July 17, 2025, 4:01 pm
கிளந்தானில் ஓரின சேர்க்கை (Gay) விருந்து: மாநில மரியாதையை களங்கப்படுத்திய செயல்: அம்னோ
July 17, 2025, 3:52 pm