நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் பலாத்காரம் புரிந்த இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் 

பெட்டாலிங் ஜெயா: 

கடந்த மாத தொடக்கத்தில் பல்கலைக்கழக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டான். 

இந்த வழக்கு விசாரணை மூவார் மாஜிஸ்திரெட் நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்த நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர் அந்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். 

இருப்பினும், குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞரின் நண்பன் தனக்கு எதிரான இரு குற்றங்களையும் மறுத்து விசாரணை கோரினான. இந்த வழக்கு விசாரணை குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 376(1) மற்றும் செக்‌ஷன் 384இன் கீழ் விசாரிக்கப்பட்டது. 

கடந்த ஜூலை 7ஆம் தேதி இரவு 9 மணி முதல் 11.30 மணி வரை பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, பிரம்படிகளும் விதிக்கப்படும், 

ஆவணங்கள் சமர்ப்பிப்பு நடவடிக்கை காரணமாக இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset