நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தோல்வியிலிருந்து மீண்டு ஜப்பான் பொது காலிறுதிக்குள் நுழைந்த  தாங் ஜீ – ஈ வேய் ஜோடி

கோலாலம்பூர்:
மலேசியாவின் கலப்பு இரட்டையர் ஜோடியான சென் தாங் ஜீ - டோ ஈ வேய், ஜப்பான் பொது பேட்மின்டன் போட்டியில் வெற்றியைப் பதிவு செய்து காலிறுதிக்குள் நுழைந்தனர்.

தோக்கியோ மெட்ரோப்பாலிடன் ஜிம்னேசியத்தில் நடந்த இரண்டாவது சுற்றில், உலக தரவரிசை 4ஆம் இடத்தில் உள்ள தாங் ஜீ – ஈ வேய் ஜோடி, இந்தோனேசியாவின் ஜாஃபார் ஹிடாயதுல்லா – பெலிஷா பசாரிபு ஜோடியை 17-21, 21-16, 21-12 என்ற செட்களில் வீழ்த்தினர்.

தொடக்கத்தில் தடுமாறியிருந்தாலும், பின்னர் ஆட்டத்தை தம்வசம் கொடு வந்து அதிரடி காட்டி, இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்களை கைப்பற்றினர். இது இந்த இந்தோனேசிய ஜோடியை அவர்கள் இரண்டாவது முறையாக வீழ்த்தும் சாதனை ஆகிறது.

 தாங் ஜீ – ஈ வேய் ஜோடி, வெள்ளிக்கிழமை நடைபெறும் காலிறுதியில் ஜப்பானின் உலக தரவரிசை 24-வது இடத்தில் உள்ள யூயிசி ஷிமோகாமி – சயாகா ஹோபாரா ஜோடியை எதிர்கொள்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset