நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய பயிற்சி சேவை திட்டம் 3.0: உடல்நலப் பிரச்சனை, உயர்க்கல்வி தொடருதல் ஆகிய காரணங்களால் மாணவர்கள் பங்கேற்பு குறைந்தது

கோலாலம்பூர்:

தேசிய சேவை பயிற்சி திட்டம் 3.0-இல் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 30% விழுக்காடு குறைந்துள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஶ்ரீ முஹம்மத் காலிட் நோர்டின் தெரிவித்தார். 

உடல்நலப் பிரச்சனை, உயர்க்கல்வி தொடருதல் ஆகிய காரணங்களால் மாணவர்களின் பங்கேற்பு குறைந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

தேசிய சேவை பயிற்சி திட்டம் 3.0 இன்னும் சோதனை கட்டத்தில் உள்ளது.

முழுமையான செயல்பாடு அடுத்த ஆண்டில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் காலிட் நோர்டின் தெரிவித்தார். 

45 நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சி திட்டம் பங்கேற்பாளர்களிடமிருந்து நேர்மறையான கருத்துக்களைப் பெற்றுள்ளது.

முந்தைய இரண்டு தொடர்களில் பங்கேற்றவர்கள் நல்ல கருத்துக்களைத் தெரிவித்தனர்.

மேலும் இராணுவப் பயிற்சி உள்ளடக்கத்தை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர் என்று ஃபெல்டா லோக் ஹெங் பாரட்டில் நடைபெற்ற பகாங் தேசிய பல்கலைக்கழத்தின் கெம்பாரா லெஸ்தாரி கோத்தா திங்கி நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் அமைச்சர் இவ்வாறு கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை
 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset