நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

LGBTQ விற்கு எதிராக கிளாந்தான் மாநிலத்தில் கடுமையாகவிருக்கும் ஷரியா சட்டங்கள் 

கோத்தா பாரு: 

LGBTQ விற்கு எதிராக கிளாந்தான் மாநிலத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

அவ்வகையில் கிளாந்தானில் உள்ள ஷரியா சட்டத்தை இன்னும் கடுமையாக்க கிளாந்தான் மாநில அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

ஷரியா சட்டத்தின் 2019ஆம் ஆண்டு ஷரியா குற்றவியல் சட்டத்தின் விதி 1 ஐ திருத்தம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. 

இதனால், ஓரின சேர்க்கை, பாலினவியல் என்று வகைப்படுத்தப்படும் LGBTQ நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த முடியும் என்று மாநிலத்தின் துணை மந்திரி பெசார் ஃபட்ச்லி ஹசான் குறிப்பிட்டார். 

இஸ்லாமிய சமயத்திற்கு எதிரான எந்தவொரு ஒழுக்கமற்ற நடவடிக்கைகளுக்கும் கிளாந்தான் மாநிலத்தில் இடமில்லை என்று அவர் திட்டவட்டவாக கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset