நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தலைமையாசிரியர்களின் பதவி உயர்வு விவகாரத்தில் கல்வியமைச்சு கவனம் செலுத்தும்: ஃபட்லினா சிடேக்

கோலாலம்பூர்:

தலைமையாசிரியர்களின் பதவி உயர்வு விவகாரத்தில் கல்வியமைச்சு கவனம் செலுத்தி வருவதாக அதன் அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் கல்வியமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கோத்தா கினாபாலுவில் நேற்று இரவு மலேசிய தலைமை ஆசிரியர்கள் சங்கத்துடன் இணைந்து சபா மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியில் இது குறித்து ஃபட்லினா பேசினார்.

மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் மற்றும் முழு சமூகத்தின் நலனுக்காக சில மாற்றங்கள் தேவை என்றும் அதனை தலைமை ஆசிரியர்கள் முறையாக கையாள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மலேசிய தலைமை ஆசிரியர்கள் சங்கம் (PGBM) நாட்டின் கல்வி அமைப்பில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.

அவர்கள் முன்வைத்த அனைத்து விவகாரங்களையும் கல்வியமைச்சு கருத்தில் கொண்டு பரிசீலனை செய்யும் என்று ஃபட்லினா உறுதியளித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset