
செய்திகள் மலேசியா
மலாயாப் பல்கலைக்கழகத்தில் கவிக்கோ அப்துர் ரஹ்மானுக்கு நினைவு ஆய்வு இருக்கை: தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் கிடைத்த மாபெரும் அங்கீகாரம்: உயர் கல்வி அமைச்சர் ஜம்ரி அப்துல் காதிர்
கோலாலம்பூர்:
மலாயாப் பல்கலைக்கழகத்தில் உள்ள இந்திய ஆய்வியல் துறையில் கவிக்கோ அப்துர் ரஹ்மானுக்கு நினைவு ஆய்வு இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.
ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை, மலேசிய இஸ்லாமிய அறவாரியம் முயற்சியில் இந்த ஆய்வு இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளையின் தலைவர் சிங்கப்பூர் முஸ்தபா 5 லட்சம் ரிங்கிட்டை இந்த இருக்கைக்கு நன்கொடையாக வழங்கினார்.
இந்த நிதி மாணவர்கள் குறிப்பாக இந்திய ஆய்வியல் துறை மாணவர்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என்று துவக்கவுரையாற்றிய டத்தோ ஸ்ரீ முஹம்மது இக்பால் கூறினார்.
காலை வேளையின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மலேசிய உயர்க்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காதிர் கூறுகையில், உலகின் மூத்த மொழியாக தமிழ் மொழி விளங்குகிறது. இந்த மொழியின் வளர்ச்சிக்கு இந்திய முஸ்லிம் மக்களின் பங்களிப்பு அளப்பரியதாக உள்ளது.
மேலும் தென்னிந்தியாவில் உள்ள தமிழர்களும் இந்திய முஸ்லிம்களும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வருவதை வரலாறு நெடுகிலும் காணலாம்.
அவ்வகையில் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பாடுபட்ட கவிக்கோ அப்துல் ரஹ்மான் ஆய்வு இருக்கை மலாயா பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது என்று டத்தோஸ்ரீ ஜம்ரி கூறினார்.
ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளையின் மூலம் 5 லட்சம் ரிங்கிட் நிதி நன்கொடையாக வழங்கப்பட்டது என்பது இந்திய ஆய்வியல் துறை மாணவர்கள் தங்களின் தமிழ்மொழி, தமிழிலக்கியம் ஆய்வுக்காக பயன்படுத்தி கொள்ளலாம் என்று மலேசிய இஸ்லாமிய அறவாரியத்தின் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால் மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
சாகித்திய அகாடமி விருது பெற்ற கவிக்கோ அப்துர் ரஹ்மானுக்கு இங்கு ஆய்வு இருக்கை அமைக்கப்பட்டுள்ளது பெருமையளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மேனாள் அமைச்சருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறுகையில், கடல் கடந்தும் கவிக்கோ அப்துர் ரஹ்மானின் படைப்புகள் போற்றப்படுகின்றன என்று புகழாரம் சூட்டினார்.
இறையருட் கவிஞர் சீனி நைனா முஹம்மது, புலவர் ப மு அன்வர், மைதீ சுல்தான் போன்ற மலேசியத் தமிழ் இலக்கியவாதிகள் இப்போது இல்லையே என்று எண்ணிப் பார்க்கிறேன். மலாயாவில் தமிழ் வளர்த்த முஸ்லிம்கள் பற்றி நெடிய வரலாறு உண்டு. இப்போது அந்த வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் டத்தோ ஸ்ரீ இக்பால் இறங்கி இருப்பது பாராட்டிற்குரியது.
தமிழகத்திலிருந்து வருகை புரிந்திருந்த பேராசிரியர் முனைவர் அப்துல் சமது, கவிக்கோவின் படைப்புகளை பற்றி புகழ்ந்துரைத்தார். சாதி, மதம் கடந்து அவரின் கவிதைகள் மக்கள் மத்தியில் சிந்தனையை விதைத்தது என்று சொன்னார்.
சூபி இலக்கியத்தை இலகு தமிழில் தந்த பெருமை கவிக்கோ உண்டு என்றார்.
மூன்றாவது அமர்வாக இடம்பெற்ற இலக்கிய கருத்தாடல் நிகழ்ச்சியை பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணன் மணியம் நெறிப்படுத்தினார். கவிக்கோவின் மொழி நடை, இலக்கியம், கவிதைகள் ஆகிய தலைப்புகளின் சிங்கை ஆண்டியப்பன், சிங்கை ஷா நவாஸ், விரிவுரையாளர் சில்லாழி, இலங்கை பேராசிரியர் ரமீஸ் ஆகியோர் சுவைபடப் பேசினர்.
காலையில் தொடங்கிய நிகழ்ச்சி மதியம் 1.30 மணிக்கு நிறைவு பெற்றது. நிகழ்வின் நன்றியுரையை டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால் வழங்கினார்.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
July 17, 2025, 5:21 pm
2026-ஆம் ஆண்டு ஜனவரி முதல் இளைஞர் வயது வரம்பு 30 ஆகக் குறைப்பு: ஹன்னா இயோ
July 17, 2025, 4:48 pm
பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் பலாத்காரம் புரிந்த இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்
July 17, 2025, 4:36 pm
மலேசிய திறன் சான்றிதழ் வாயிலாக திவேட் பயிற்சிக்கான புரட்சி தொடரும்: ஸ்டீவன் சிம்
July 17, 2025, 4:35 pm
அனைவரும் கோலாலம்பூர் நகரத்தின் தூய்மையைப் பராமரிக்க வேண்டும்: ஜலிஹா முஸ்தாஃபா
July 17, 2025, 4:01 pm
கிளந்தானில் ஓரின சேர்க்கை (Gay) விருந்து: மாநில மரியாதையை களங்கப்படுத்திய செயல்: அம்னோ
July 17, 2025, 3:52 pm