
செய்திகள் மலேசியா
மருத்துவமனை சவக்கிடங்கு குண்டர் கும்பல் கட்டுப்பாட்டில் உள்ளது: முன்னாள் மருத்துவர்
பெட்டாலிங் ஜெயா:
சரவாக்கில் உள்ள ஒரு பொது மருத்துவமனையின் சவக்கிடங்கு இறுதிச் சடங்குகளுக்கான முகவர்களாகச் செயல்படும் ஒரு குண்டர் கும்பல் கட்டுப்பாட்டில் உள்ளதாக முன்னாள் மருத்துவர் ஜோஹன், குற்றம் சாட்டியுள்ளார்.
அவசர சிகிச்சைப் பிரிவு அல்லது மருத்துவமனை வார்டுகளில் மரணம் பதிவானவுடன், சில சமயங்களில் மரணம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்பே, கும்பல் உறுப்பினர்கள் பெரும்பாலும் மருத்துவமனைக்கு வருவார்கள் என்று அவர் கூறினார்.
மருத்துவமனை ஊழியர்களில் சிலர் அவர்களுக்கு தகவல்களைக் கொடுப்பதாகவும் அதற்கு பதிலாக பணம் பெற்று கொள்ளவதாகவும் என்று அவர் தெரிவித்தார்.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அமைச்சகத்தில் பணியாற்றிய ஜோஹன், இந்தக் கும்பல் முக்கியமாக முஸ்லிம் அல்லாத உடல்களை குறி வைப்பதாகவும் இந்த நடைமுறை இன்றுவரை தொடர்கிறது என்றும் கூறினார்.
தற்போது மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு நண்பர், இந்த முகவர்கள் இன்னும் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் சவக்கிடங்கில் சுற்றித் திரிவதை உறுதிப்படுத்தினார் என்று அவர் குறிப்பிட்டார்.
இதன் விளைவாக, பெரும்பாலான குடும்பங்கள் இறுதிச் சடங்கு சேவைகளை நியாயமான முறையில் தேர்வு செய்யாமல் விரைவான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், இறந்த முஸ்லிம் அல்லாத ஒருவரின் நெருங்கிய உறவினர் ஒருவர், 2017 ஆம் ஆண்டு உடல் அடையாளம் காணும் பணியின் போது செரஸில் உள்ள ஒரு மருத்துவமனை ஊழியர் RM200 கேட்டதாக தெரிவித்ததை ஜொஹன் சுட்டிக் காட்டினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 17, 2025, 5:21 pm
2026-ஆம் ஆண்டு ஜனவரி முதல் இளைஞர் வயது வரம்பு 30 ஆகக் குறைப்பு: ஹன்னா இயோ
July 17, 2025, 4:48 pm
பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் பலாத்காரம் புரிந்த இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்
July 17, 2025, 4:36 pm
மலேசிய திறன் சான்றிதழ் வாயிலாக திவேட் பயிற்சிக்கான புரட்சி தொடரும்: ஸ்டீவன் சிம்
July 17, 2025, 4:35 pm
அனைவரும் கோலாலம்பூர் நகரத்தின் தூய்மையைப் பராமரிக்க வேண்டும்: ஜலிஹா முஸ்தாஃபா
July 17, 2025, 4:01 pm
கிளந்தானில் ஓரின சேர்க்கை (Gay) விருந்து: மாநில மரியாதையை களங்கப்படுத்திய செயல்: அம்னோ
July 17, 2025, 3:52 pm