நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திருமண முகாமில் நிர்வாண நிகழ்ச்சி: காவல் துறை உறுதிப்படுத்தியது

ஷா ஆலம்: 
அண்மையில் நடந்த eHati திருமண ஊக்குவிப்பு நிகழ்ச்சியில் நிர்வாணமாக சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது என்பதை காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது..

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக "rebirth" என அழைக்கப்பட்ட ஒரு அபாசமான சடங்கில், நான்கு ஏற்பாட்டாளர்கள் நிர்வாணமாக பங்கேற்றுள்ளனர் என்பதை சிலாங்கூர் மாநில காவல்துறை தலைவர் டத்தோ உசேன் ஒமார் கான் உறுதிப்படுத்தினார்.

“நாங்கள் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கலந்து கொண்டவர்கள் இரண்டு வேறுபட்ட திட்டங்களுக்கு RM6,000 முதல் RM9,000 வரை கட்டணம் செலுத்தியதாகத் தெரியவந்துள்ளது,” என்று அவர் கூறினார்.

RM9,000 திட்டம் தேர்வு செய்தவர்கள், 'Queens Night' என அழைக்கப்பட்ட நிர்வாணக் காட்சி நிகழ்ச்சிக்கு அனுமதி பெற்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது, அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களிடம் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
பொது ஒழுங்கு மற்றும் ஒழுங்கற்ற  செயல்களை எதிர்க்கும் வகையில், போலீசார் தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset