நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்னோவின் இஷாம் ஜாலில் விடுவிப்புக்கு எதிராக தேசிய சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு தாக்கல்

கோலாலம்பூர்: 

முன்னாள் அம்னோ தகவல் தொடர்பு தலைவர் இஷாம் ஜாலில் உயர்நீதிமன்றத்தால் விடுவிப்பு செய்ததை அடுத்து தேசிய சட்டத்துறை அலுவலகம் விடுவிப்பு நடவடிக்கைக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது. 

இந்த விவகாரத்தை இஷாம் ஜாலில் வழக்கறிஞர் ஜேமி வோங் உறுதிப்படுத்தினார். 

தேசிய சட்டத்துறை அலுவலக தரப்பிடமிருந்து இந்த நோட்டீஸ் அறிவிப்பு ஜூலை 15ஆம் தேதி மின்னஞ்சல் மூலமாக வந்தது என்று அவர் தெரிவித்தார். 

முன்னதாக, கடந்த ஜூலை 8ஆம் தேதி இஷாம் ஜாலில் இங்குள்ள கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தால் நிபந்தனையுடன் கூடிய விடுவிப்பினை வழங்கியது. TOWNHALL FOR JUSTICE எனும் தலைப்பில் பேசிய கருத்தானது அவரது சொந்த கருத்தாகும் என்று வழக்கை விசாரித்த நீதிபதி கே. முனியாண்டி கூறினார். 

இஷாம் ஜாலில் நீதித்துறையின் மாண்பினைக் கெடுக்கும் வகையில் எந்தவொரு முயற்சிகளிலும் ஈடுபடவில்லை என்று நீதிபதி மேலும் குறிப்பிட்டிருந்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset