நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெஅடிலான் கட்சியை அழிப்பது தான் ரபிசியின் உண்மையான நோக்கமா?: டத்தோ அஸ்மான் கேள்வி

கோலாலம்பூர்:

கெஅடிலான் கட்சியை அழிப்பது தான் ரபிசியின் உண்மையான நோக்கமா என்று கூட்டரசுப் பிரதேச கெஅடிலான் கட்சியின் இடைக்காலத் தலைவர் டத்தோ அஸ்மான் அபிடின் கேள்வி எழுப்பினார்.

பாண்டன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ரபிசி ராம்லியின் செயல்களால் கூட்டரசுப் பிரதேச கெஅடிலான் ஏமாற்றமடைந்துள்ளது.

கெஅடிலான் தேர்தலில் துணைத் தலைவர் பதவியை இழந்ததிலிருந்து, ரபிசி ஒரு  எதிராளி போல் கருதப்படுகிது.

கட்சியின் முதுகில் குத்துவது போல் தெரிகிறது. குறிப்பாக கட்சியை உள்ளிருந்து அழிக்க விரும்பியதாகக் கூறப்படுகிறது.

அவரின் செயலால் நானும் மற்ற உறுப்பினர்களும் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம். அவரது உண்மையான நோக்கம் என்ன?

கட்சி,  அரசாங்கத்தின் மீது உறுப்பினர்கள், மக்களின் நம்பிக்கையை அவர் அழிக்க விரும்புகிறாரா?

சமீபத்திய தோல்வியின் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாததால் ரபிசியின் நடத்தை பிடிவாதமாக இருப்பதாக நான் நம்புகிறேன்.

மேலும் கட்சியில் அவர் இல்லாமல் இந்த அரசாங்கம் பலவீனமடைவதை உறுதி செய்வதே அவரது குறிக்கோள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset