நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

4 மாதங்களில் 2,467 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன: நோரைனி அஹமத் 

கோலாலம்பூர்: 

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை, நாடு முழுவதும் மொத்தமாக 2,467 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் நோரைனி அஹமத் தெரிவித்தார்.

இல்லத்தரசிகளே குடும்ப வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வுகள் காட்டுகின்றன என அவர்  தெரிவித்தார்.

சிலர் வன்முறைக்கு ஆளாகியும், அதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கக்கூடும். 

சில நேரங்களில், கணவர்கள் 'ரிவர்ஸ் சைக்காலஜி' போன்ற உளவியல் முறைகளைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக உணரச் செய்கிறார்கள் என துணை அமைச்சர் நோரைனி அஹமத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவருக்கு மிகவும் நெருக்கமான நபர்கள் அல்லது குடும்பத்தினரே, பெரும்பாலான குடும்ப வன்முறைகளில் ஈடுபடுகின்றனர் என ஆய்வுகள் காட்டுகின்றன. 

இன்று "Aku Wanita @ KRT" பெண்கள் நல விழிப்புணர்வு திட்டத்தைத் தொடக்கி வைத்தப் பின் செய்தியாளர்களிடம் நோரைனி அஹமத் இவ்வாறு கூறினார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset