நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உணவகத்தில் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 65 வயதுடைய முதியவர் கைது: போலிஸ்

ஜொகூர்பாரு:

உணவகத்தில் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 65 வயதுடைய முதியவரை போலிசார் கைது செய்துள்ளனர்.

தென் ஜொகூபாரு தெற்கு மாவட்ட போலிஸ் தலைவர் ரவூப் செலாமாட் இதனை உறுதிப்படுத்தினார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்குள்ள தாமான் செத்தியா இந்தாவில் உள்ள ஒரு உணவகத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவம் நிகழ்ந்தது.

இச்சம்பவத்தில் ஆடவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நபரின் மரணம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக ஒரு வெளிநாட்டு ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

65 வயதான அந்த நபர் நேற்று மாலை 4.30 மணியளவில் நகரம் முழுவதும் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

அவர் இன்று முதல் அடுத்த செவ்வாய்க்கிழமை வரை ஏழு நாட்களுக்கு மேலதிக விசாரணைகளுக்கு உதவுவதற்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது ஒரு புதிய கைது. இந்த வழக்கில் அவர்களின் தொடர்பை உறுதிப்படுத்த நாங்கள் இன்னும் விசாரணைகளை நடத்தி வருகிறோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset