நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேச்சுவார்த்தைக்குப் பின்னரே அமெரிக்காவுடன் வர்த்தக உடன்பாடு எட்டப்பட்டது: இந்தோனேசிய அரசாங்கம்

ஜகார்த்தா:

இந்தோனேசியா பெரும் முயற்சிக்குப் பின்னரே அமெரிக்காவுடன் வர்த்தக உடன்பாட்டை எட்டியதாகத் தெரிவித்துள்ளது.

சவால்மிக்கப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தோனேசியப் பொருள்கள் மீது அமெரிக்க விதித்த 32 விழுக்காட்டு வரி 19 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளதாய் அந்நாடு கூறியது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாந்தோவுடன் பேசிய பிறகு இரு நாடுகளிடையே உடன்பாடு எட்டப்பட்டதாக அவரது Truth Social சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டார்.

உடன்பாடு குறித்த மேல் விவரங்களை நாடு திரும்பிய பின்பு செய்தியாளர் கூட்டத்தில் பகிரவுள்ளதாக பிரபோவோ சொன்னார்.

இந்தோனேசியாவிற்கான புதிய வரிவிகிதம் எப்போது நடப்புக்கு வரும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset