நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

269ஆவது மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் கூட்டம்: சிலாங்கூர் சுல்தான் தலைமை தாங்குகிறார் 

கோலாலம்பூர்: 

269ஆவது மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் கூட்டம் கோலாலம்பூர் இஸ்தானா நெகாராவில் நடைபெற்று வருகிறது. 

இந்த கூட்டத்திற்கு சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா தலைமை தாங்கியுள்ளார். 

மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் கூட்டத்தில் பேராக், கெடா மாநில சுல்தான்களும் நெகிரி செம்பிலான் யாங் டிபெர்துவான் பெசார், ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். 

ஜொகூர் மாநிலத்திலிருந்து துங்கு தெமெங்க்கொங் ஜொகூர் துங்கு இட்ரிஸ் இஸ்கண்டார் சுல்தான் இப்ராஹிம் கலந்து கொண்டுள்ளார். 

269ஆவது மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் முந்தைய கூட்டத்திற்கு நேற்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் தலைமை தாங்கியிருந்தார். 

கடந்த முறை பிப்ரவரி 5ஆம் தேதி மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் கூட்டம் நடைபெற்றது. கெடா மாநில சுல்தான், சுல்தான் சலேஹுடின் சுல்தான் பட்லிஷா தலைமை தாங்கியிருந்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset