
செய்திகள் மலேசியா
மகள் இறந்ததற்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமும் முக்கிய காரணம்: பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்
கிள்ளான்:
தங்கள் மகள் இறந்ததற்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமும் முக்கிய காரணம் என 47 வயதான எம். கோபாலனும் 45 வயதான பி. மகஸ்வரியும் குற்றம் சாட்டுகின்றனர்.
கிள்ளானில் உள்ள ஒரு பள்ளியில் விஷம் குடித்து 17 வயதுடைய மாணவி ஒருவர் மரணமடைந்தார்.
பள்ளி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறியதால் தங்கள் மகள் உயிரிழந்து விட்டதாக அவர்கள் கூறினர்.
கடந்த மே 27ஆம் தேதி நடந்த சம்பவத்தின் போது பள்ளி நிர்வாகத்தினர் விரைவாகச் செயல்படவில்லை.
தங்கள் மகளை அருகிலுள்ள கிளினிக் அல்லது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக அவர்கள் ஆம்புலன்ஸுக்காகக் காத்திருந்துள்ளனர்.
அருகிலுள்ள கிளினிக் பள்ளியிலிருந்து இரண்டு நிமிட பயண தூரத்தில் உள்ளது.
அதே நேரத்தில் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை சுமார் 15 நிமிட பயண தூரத்தில் உள்ளது.
ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் என் மகளை கிளினிக்கோ அல்லது மருத்துவமனைக்கோ அழைத்துச் செல்ல முடியாது என தெரிவித்தனர்
காரணம் எஸ்ஓபி எனப்படும் நிலையான இயக்க நடைமுறை படி பெற்றோர் வர வேண்டும்.
மேலும் ஆம்புலன்ஸ் வரும் வரை அவருக்கு எந்த அவசர சிகிச்சையையும் வழங்கவில்லை.
எஸ்ஓபியை காரணம் காட்டி அவர்கள் எதற்கும் ஒத்துழைக்கவில்லை.
இதனால் என் மகள் இறந்து விட்டாள். அவன் மாரடைப்பால் இறந்தால், அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியும்.
என் மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அனுமதிப்பீர்களா என்று பள்ளி தலைமையாசிரியரோ அல்லது வகுப்பு ஆசிரியரோ கேட்டால், நான் உடனடியாக சம்மதித்திருப்பேன்.
ஆனால் இப்போது எல்லாமே பாலாகி விட்டது. எங்கள் மகளை நாங்கள் இழந்து விட்டோம் என்று கோபாலன் வேதனையுடம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 16, 2025, 10:01 pm
தியோ பெங் ஹாக்கை கொலை செய்தவர்கள் யார் என்பது எங்களுக்கு தெரிய வேண்டும்: இழப்பீடு வேண்டாம்
July 16, 2025, 5:16 pm
அம்னோவின் இஷாம் ஜாலில் விடுவிப்புக்கு எதிராக தேசிய சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு தாக்கல்
July 16, 2025, 4:37 pm
கெஅடிலான் கட்சியை அழிப்பது தான் ரபிசியின் உண்மையான நோக்கமா?: டத்தோ அஸ்மான் கேள்வி
July 16, 2025, 4:35 pm
உணவகத்தில் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 65 வயதுடைய முதியவர் கைது: போலிஸ்
July 16, 2025, 4:34 pm
மேக்ஸ் நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்தது: 13 பேர் உயிர் தப்பினர்
July 16, 2025, 4:08 pm
4 மாதங்களில் 2,467 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன: நோரைனி அஹமத்
July 16, 2025, 4:00 pm