நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மேக்ஸ் நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்தது: 13 பேர் உயிர் தப்பினர்

கோலாலம்பூர்:

மேக்ஸ் நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் 13 பேர் உயிர் தப்பினர்.

சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறை உதவி செயல்பாட்டு இயக்குநர் அஹ்மத் முகிலிஸ் மொக்தார் இதனை கூறினார்.

இன்று காலை புத்ராஜெயாவிலிருந்து ஸ்ரீ கெம்பங்கன் நோக்கி வடக்கு நோக்கிச் செல்லும்  மேக்ஸ் நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்புத் துறைக்கு காலை 8.14 மணியளவில் அவசர அழைப்பு வந்தது.

அருகிலுள்ள தீயணைப்பு ,  மீட்பு நிலையத்திலிருந்து ஏழு பணியாளர்கள், ஒரு தீயணைப்பு வண்டியும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.

அதிகாரிகள் ஐந்து நிமிடங்களுக்குள் தீ வெற்றிகரமாக கட்டுப்படுத்தினர். ஆனால் பேருந்து கிட்டத்தட்ட 90 சதவீதம் எரிந்து நாசமானது.

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கேஎல் சென்ட்ரலுக்கு 12 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து என்று அறியப்படுகிறது.

சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset