நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய பாதுகாப்பு, நீதிபதிகள் நியமனம் ஆகியவை ஆட்சியாளர்கள் மன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய விவகாரங்களாகும்

கோலாலம்பூர்:

தேசிய பாதுகாப்பு, நீதிபதிகள் நியமனம் ஆகியவை ஆட்சியாளர்கள் மன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்களாகும்.

ஆட்சியாளர்களின் முத்திரை காப்பாளர் சையத் டேனியல் சையத் அகமது இதனை கூறினார்.

இன்று இஸ்தானா நெகாராவில் ஆட்சியாளர்கள் மன்றத்தின் 269ஆவது கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா தலைமை தாங்கினார்.

தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள், நீதிபதிகள் நியமனம், வேப்பிங் தடை விதிக்கப்பதற்கான முன்மொழிவு ஆகியவை விவாதிக்கப்பட்ட விஷயங்களில் அடங்கும்.

மேலும்  தேசிய பாதுகாப்பு குறித்த சமீபத்திய விளக்கத்தை போலிஸ் துறைத் தலைவர் டத்தோஸ்ரீ  முகமட் காலித் இஸ்மாயிலும்,  ஆயுதப்படைத் தளபதி முகமட் நிஜாம் ஜாஃபரும் வழங்கினர்.

குறிப்பாக கூட்டரசு நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட நீதிபதிகள் நியமனம், சபா, சரவா உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி, மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர்,  நாட்டின் தலைமை நீதிபதி ஆகியோரின் நியமனம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக சையத் டேனியல் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset