நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தியோ பெங் ஹாக்கை கொலை செய்தவர்கள் யார் என்பது எங்களுக்கு தெரிய வேண்டும்: இழப்பீடு வேண்டாம்

கோலாலம்பூர்:

தியோ பெங் ஹாக்கை கொலை செய்தவர்கள் யார் என்பது எங்களுக்கு தெரிய வேண்டும்.

மாறாக இழப்பீடு எங்களுக்கு வேண்டாம் என அவரின் குடும்பத்தார் கூறினர்.

தியோ பெங் ஹாக்கின் குடும்பத்தினர் எம்ஏசிசியின் மன்னிப்பை நிராகரித்தனர்.

இந்த மன்னிப்பை அவர்கள் நேர்மையற்றது என விவரித்தனர்

மேலும் பெங் ஹாக்கின் மரணத்திற்கு நீதி வேண்டும். இழப்பீடும் பணமும் அல்ல என்று அவர்கள் வலியுறுத்தினர்.

எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கியின் இன்றைய அறிக்கையால் தங்கள் குடும்பத்தினர் மிகுந்த வருத்தமும் கோபமும் அடைந்துள்ளனர்.

அவரின் அறிக்கை வேண்டுமென்றே எங்கள் குடும்பத்தை அவமானப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

நாங்கள் பணத்தை மட்டுமே விரும்புகிறோம் என்று காட்டுகிறது

உண்மையில் எங்களுக்குத் தேவை உண்மையும் நீதியும்தான் என்று பெங் ஹாக்கின் தம்பி தியோ லீ லான்  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset