நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

யுகாஷினி உட்பட 13 மாணவர்கள் மாமன்னரின் கல்வி உபகாரச் சம்பளத்தை பெற்றனர் 

கோலாலம்பூர்:

மாணவி யுகாஷினி  உட்பட 13 மாணவர்கள் மாமன்னரின் கல்வி உபகாரச் சம்பளத்தை பெற்றனர்.

இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இந்த கல்வி உபகாரச் சம்பளத்தை வழங்கினார்.

கல்வி உபகாரச் சம்பளம் பெற்ற மாணவர்களில் 10 பேர் முனைவர் படிப்பை தொடர்கின்றனர்.  மூன்று பேர் முதுகலை படிப்பை தொடர்கின்றனர்.

மருந்தியல் துறையில் முனைவருக்கான உபகாரச் சம்பளத்தை பெற முகமது ஃபரிஸ் ஹைகால் முகமது ருஸ்லான் இங்கிலாந்து கிங்ஸ் கல்லூரியில் தனது படிப்பைத் தொடர்கிறார்.

மற்றொருவரான கரேன் லோ கா லிங்  யூகேஎம் மாணவர் ஆவார்.

முஹம்மது ஹமிஸான் ஜவாவி (பயோலோஜி யூஎஸ்எம்), முஹம்மத் அய்மான் ஹக்கீம் நோர் காலித் (கணிதம்,  புள்ளியியல், யூகேஎம்), சாரா டானியா முகமது கஹர் (வணிகச் சட்டம், மலாயா பல்கலைக்கழகம்),  டியோஹூ (தரவு நிர்வகிப்பு மலாயா பல்கலைக்கழகம்) ஆகிய துறைகளில் பயில்கின்றனர்.

மேலும்  அஹ்மத் பிர்டாவ்ஸ்  (பயோடெக்னாலஜி, யூஎஸ்எம்), நூருல் ஏஞ்சலின்  (மரபியல்,  பரம்பரை, மலாயா பல்கலைக்கழகம்), நூர் ஷாக்காரியா (கால்நடை அறிவியல், மெல்போர்ன் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா), நூர்பாதிமா (உயிர் வேதியியல், யூகேஎம்) மாணவர்களாவர்.

ஃபாத்தினி நாடியா (உயிர் வேதியியல், யூகேஎம்), தியூ சியூ ஜின் (பயோடெக்னோலோஜி யூகேஎம்), யுகாஷினி பி முகிலன் (பயோ மெடிக்கல், யூகேம்) ஆகியோர் முதுநிலை படிப்பைத் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset