நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

15 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பெண் மரணம்: 13 பேர் காயமடைந்தனர்

லஹாட் டத்து:

15 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பெண் மரணமடைந்த வேளையில் 13 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை இங்குள்ள லாடாங் பெர்மாய் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

கிட்டத்தட்ட 15 பேர் பயணித்த பிக்கப் வாகனம்  15 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் கல்மா (33) என்பவர் மரணமடைந்தார்.  மேலும் பல காயமடைந்தனர்.

வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி சறுக்கி பள்ளத்தாக்கில் விழுந்ததாக நம்பப்படுகிறது.

ஏழு வயது ஆண்கள், ஏழு வயது பெண்கள்,  ஒரு சிறுவன் உட்பட மொத்தம் 15 பேர் வாகனத்தில் இருந்தனர்.

லஹாத் டத்து தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் மூத்த உதவி இயக்குநர் சும்சோவா ரஷீத் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset