
செய்திகள் மலேசியா
eHati திட்டத்தின் நிறுவனர்களான கணவன், மனைவி உட்பட 6 பேருக்கு மூன்று நாட்கள் தடுப்புக்காவல்
ஷாஆலம்:
eHati எனப்படும் இல்லற வாழ்க்கை திட்டத்தின் நிறுவனர்களான ஒரு கணவன், மனைவி உட்பட 6 பேர் விசாரணைகளுக்கு உதவுவதற்காக மூன்று நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நான்கு பெண்கள், இரண்டு ஆண்கள் அடங்கிய அனைத்து சந்தேக நபர்களும் ஷாஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதை அடுத்து வரும் வியாழக்கிழமை வரை அவர்கள் தடுப்பு காவலில் வைக்க மாஜிஸ்திரேட் அமீரா மஸ்துரா ரிமாண்ட் உத்தரவு பிறப்பித்தார்.
26 முதல் 57 வயதுடைய அனைத்து நபர்களும், ஒரு நபரின் அடக்கத்தை அவமதிக்கும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 509, ஒழுக்கக்கேடான நடத்தைக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 294 மற்றும் சிறு குற்றச் சட்டம் 1955 இன் பிரிவு 14 ஆகியவற்றின் கீழ் விசாரணைகளில் உதவுவதற்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.
வழக்கறிஞர் டத்தோ எம் ரெசா ஹாசன், நிறுவனத்தின் நிறுவனர்கள், அவர்களின் மகன் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்பவர் ஆகிய நான்கு நபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 17, 2025, 5:21 pm
2026-ஆம் ஆண்டு ஜனவரி முதல் இளைஞர் வயது வரம்பு 30 ஆகக் குறைப்பு: ஹன்னா இயோ
July 17, 2025, 4:48 pm
பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் பலாத்காரம் புரிந்த இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்
July 17, 2025, 4:36 pm
மலேசிய திறன் சான்றிதழ் வாயிலாக திவேட் பயிற்சிக்கான புரட்சி தொடரும்: ஸ்டீவன் சிம்
July 17, 2025, 4:35 pm
அனைவரும் கோலாலம்பூர் நகரத்தின் தூய்மையைப் பராமரிக்க வேண்டும்: ஜலிஹா முஸ்தாஃபா
July 17, 2025, 4:01 pm
கிளந்தானில் ஓரின சேர்க்கை (Gay) விருந்து: மாநில மரியாதையை களங்கப்படுத்திய செயல்: அம்னோ
July 17, 2025, 3:52 pm