
செய்திகள் மலேசியா
மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார் முன்னாள் இராணுவ வீரர்
ஈப்போ:
12 வயது மகளை பலாத்காரம் செய்ததாகவும், பாலியல் வன்கொடுமை புரிந்ததாகவும் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட ஓய்வுபெற்ற 45 வயதான இராணுவ வீரர், இன்று ஈப்போ அமர்வு நீதிமன்றத்தில் குற்றங்களை மறுத்து, விசாரணை கோரினார். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது ஆறு மாத கர்ப்பமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில், பேராக் மாநிலத்தின் பத்து காஜா பகுதியில் உள்ள வீட்டில் நடந்த சம்பவங்களை அவர் புரிந்தாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் 10 பிரம்படி தண்டனையும், 30 ஆண்டுகள் வரை சிறை தண்டணையும் விதிக்கப்படலாம்.
மேலும், அவர் நம்பிக்கைக்குரிய நபராக இருந்த நிலையிலும், சிறுமிக்கு மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை புரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த குற்றங்களுக்காகவும் 20 ஆண்டுகள் வரை சிறைவாசம், பிரம்படி, மேலும் தண்டனை முடிந்த பிறகு காவல் கண்காணிப்பு ஆகியவையும் விதிக்கப்படலாம்.
துணை அரசு வழக்கறிஞர் பிணை வழங்க வேண்டாம் எனக் கோரியபோதிலும், நீதிமன்றம் RM21,000 பிணைத் தொகையுடன், ஒருவர் உத்தரவாதத்துடன் பிணையில் செல்ல அனுமதி அளித்தது.
தொடர்புடைய செய்திகள்
July 17, 2025, 5:21 pm
2026-ஆம் ஆண்டு ஜனவரி முதல் இளைஞர் வயது வரம்பு 30 ஆகக் குறைப்பு: ஹன்னா இயோ
July 17, 2025, 4:48 pm
பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் பலாத்காரம் புரிந்த இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்
July 17, 2025, 4:36 pm
மலேசிய திறன் சான்றிதழ் வாயிலாக திவேட் பயிற்சிக்கான புரட்சி தொடரும்: ஸ்டீவன் சிம்
July 17, 2025, 4:35 pm
அனைவரும் கோலாலம்பூர் நகரத்தின் தூய்மையைப் பராமரிக்க வேண்டும்: ஜலிஹா முஸ்தாஃபா
July 17, 2025, 4:01 pm
கிளந்தானில் ஓரின சேர்க்கை (Gay) விருந்து: மாநில மரியாதையை களங்கப்படுத்திய செயல்: அம்னோ
July 17, 2025, 3:52 pm