நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீனா - மலேசியா இடையிலான இலவச விசா சேவை நாளை முதல் அமல்

கோலாலம்பூர்: 

சீனா, மலேசியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான இலவச விசா  சேவை நாளை ஜூலை 17-ஆம் தேதி முதல்  நடைமுறைக்கு வருகிறது என்று மலேசியாவிலுள்ள சீனத் தூதரகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இது சீனாவிலிருந்து மலேசியாவுக்கு வரும் பயணிகளுக்கும், மலேசியாவிலிருந்து சீனாவுக்குச் செல்லும் பயணிகளுக்கும் பொருந்தும். 

விசா இல்லாத நடைமுறையால் சீனப் பயணிகள் 30 நாள்கள் வரை மலேசியாவில் தங்க முடியும். 

அதேபோல் மலேசியர்களும் சீனாவில் 30 நாள்கள் வரை தங்க அனுமதிக்கப்படுகின்றனர். 

ஆனால், 90 நாட்களுக்கு மேல் சீனாவில் தங்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் மூலம், இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா மற்றும் வணிகப் பயணங்கள் எளிதாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக,  சீனாவும், மலேசியாவும் பரஸ்பர விசா இல்லாத பயணத்தைச் செயல்படுத்த ஒப்புக்கொண்டன.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset