நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

"கொடூரம்" 3 மாத குழந்தை பாலியல் வன்கொடுமை விவகாரம் : உள்துறை அமைச்சர் கடும் கண்டனம்

புத்ராஜெயா: 
மூன்று மாத குழந்தையொன்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி, அதனை வீடியோவில் பதிவு செய்து இணையத்தில் விற்றதாகக் கூறப்படும் கொடூர சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுடியான் இஸ்மாயில் கடுமையான அதிர்ச்சி மற்றும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

இன்று நடைபெற்ற உள்துறை அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றிய அவர், இந்த விவகாரத்தைக் குறித்து காவல்துறையினரிடமிருந்து இரவு 12.30 மணிக்கு தனிப்பட்ட முறையில் தகவல் பெற்றதாகக் குறிப்பிட்டார். 

அந்த நேரத்தில் தகவல் தெரிவிக்கப்படுவது நடந்தது மிக மோசமான செயலாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

"மூன்று மாத குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி, அதை வீடியோவாகப் படம்பிடித்து விற்றிருக்கிறார்கள். இது மனிதநேயம் அற்ற செயல். இது பைத்தியக்காரத்தனமான செயல். இப்படி ஒரு செயல் எப்போதும் நம் எண்ணத்தில் கூட வரக்கூடாது," என அவர் உணர்ச்சிவசமாக தெரிவித்தார். இந்த சம்பவம் மலேசியாவில் நடந்ததா அல்லது வெளிநாட்டில் நடந்ததா என்பதையும் அவர் வெளியிடவில்லை.

சம்பவம் தொடர்பாக ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போதும், அமைச்சர் மேலதிக தகவல் வழங்க மறுத்தார். 

இதேவேளை, புற்றுநோயைப் போன்று பரவும் பாலியல் குற்றங்களை தடுக்கும் நோக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறையின் (CID) பெண்கள், குழந்தைகள் மற்றும் பாலியல் குற்ற விசாரணைப் பிரிவு (D11) கூடுதல் வலுவூட்டப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset