நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரரசரின் ரஷ்யா பயணம் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும்

கோலாலம்பூர்:
மலேசியாவின் மாட்சிமை தாங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம்மின் அதிகாரப்பூர்வ ரஷ்ய அரசு பயணத்துக்கான முன்னேற்பாடுகள் குறித்து அவருக்கு இன்று அதிகாரபூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டது

இந்த கலந்தாய்வு, இஸ்தானா நெகராவில்  நடந்தது. அதில், வெளியுறவு அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ ஆசமான்  தலைமையில் முக்கிய உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

மலேசியாவுக்கான ரஷ்ய தூதர் நயில் எம். லட்டிபோவ், நெறிமுறைத் துறை தலைவர் டத்தோ யுபாஸ்லான் யூசுப், அரசாங்க நெறிமுறைப் பிரிவு தலைவர் டத்தோ ரோசைநொர் ரம்லி, ஐரோப்பிய பிரிவு செயலாளர் அபூபக்கர் மாமட், மற்றும் இஸ்தானா நெகரா நிர்வாகத் தலைவர் தான் ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள இந்த அரசு பயணம், பேரரசர் சுல்தான் இப்ராஹிமின் முதலாவது ரஷ்யப் பயணமாகும், மேலும் இது இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வர்த்தகம், கல்வி, ஆற்றல் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் மலேசியா - ரஷ்யா இடையேயான ஒற்றுமை மேலும் விரிவடையும் என கூறப்படுகின்றது.

பேரரசர் ஆட்சி அரியணை ஏற்றதிலிருந்து மலேசியாவின் வெளிநாட்டு நட்புறவுகள் மீதான கவனம் அதிகரித்து வருகிறது. இந்த பயணம், உலக அரசியல் சூழலில் மலேசியா தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset