
செய்திகள் மலேசியா
ஆற்றில் கார் கண்டுபிடிப்பு: மோட்டார் பிரபலத்தை தேடும் பணிகள் தீவிரம்!
முவார்:
மோட்டார் சைக்கிள் பாகங்கள் விற்பனை மூலம் இன்ஸ்டாகிரமில் பிரபலமான 38 வயதான தெங்கு நிசாருடின் (Ija), கார் கெப்போங் சுங்கை துவா ஆற்றில் கண்ணெடுக்கப்பட்ட நிலையில், அவர் தேடும் பணி தொடர்ந்து வருகின்றது.
முன்னதாக அவர் கடந்த ஜூலை 14-ஆம் தேதி காணாமல் போனார். இவர் ஜொகூர் பாருவிலிருந்து, தனது சகோதரருடன் வணிகக் காரணமாக பரித் ஜாவாக்கு தனித்தனியாக காரில் சென்றிருந்தார்.
நேற்று பிற்பகல் 3 மணியளவில், பொதுமக்கள், அவரது வெள்ளை நிற Perodua Axia காரை, சுங்கை துவா பண்ணைக்கு அருகில் உள்ள ஆற்றின், கரை மூழ்கிய நிலையில் கண்டுபிடித்தனர்.
இதனிடையே முவார் மற்றும் பாகோ தீயணைப்பு நிலைய மீட்பு படையினர், போலீசார் மற்றும் குக்குளிப்பு வீரர்கள் என மொத்தம் 45 பேரின் குழு, 10 கி.மீ. சுற்றளவில், நிலமும் ஆறும் இணைந்த பகுதிகளில் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இன்று தேடுதல் பணிகள் இரண்டாவது நாளாக நடக்கின்றன என மாவட்ட தீயணைப்பு தலைவர் நோர்ஷுஹாதா அம்சாரி தெரிவித்தார்.
அவர் இப்போது உயிருடன் இல்லை என்ற உறுதி இல்லாத செய்திகள் சமூக ஊடகங்களில் பரவுவது தவறு என அவரது சகோதரர் தெங்கு அப்துல் அசிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“இன்னும் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. எங்கள் குடும்பத்தின் நம்பிக்கையை மதியுங்கள். தயவு செய்து யாரும் அதாரமற்ற பேச்சுகளை பகிர வேண்டாம்,” எனக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
July 16, 2025, 10:01 pm
தியோ பெங் ஹாக்கை கொலை செய்தவர்கள் யார் என்பது எங்களுக்கு தெரிய வேண்டும்: இழப்பீடு வேண்டாம்
July 16, 2025, 10:00 pm
மகள் இறந்ததற்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமும் முக்கிய காரணம்: பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்
July 16, 2025, 5:16 pm
அம்னோவின் இஷாம் ஜாலில் விடுவிப்புக்கு எதிராக தேசிய சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு தாக்கல்
July 16, 2025, 4:37 pm
கெஅடிலான் கட்சியை அழிப்பது தான் ரபிசியின் உண்மையான நோக்கமா?: டத்தோ அஸ்மான் கேள்வி
July 16, 2025, 4:35 pm
உணவகத்தில் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 65 வயதுடைய முதியவர் கைது: போலிஸ்
July 16, 2025, 4:34 pm
மேக்ஸ் நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்தது: 13 பேர் உயிர் தப்பினர்
July 16, 2025, 4:08 pm
4 மாதங்களில் 2,467 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன: நோரைனி அஹமத்
July 16, 2025, 4:00 pm