நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நோட்டீஸ் வழங்காமல் பேரணி நடத்துவது காவல்துறைக்கு சிக்கலை ஏற்படுத்தும்: சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கருத்து 

புத்ராஜெயா: 

அமைதியான முறையில் பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் போலீஸ் தரப்புக்கு முன்கூட்டியே நோட்டீஸ் வழங்காமல் பேரணி நடத்துவது என்பது காவல்துறைக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று நாட்டின் உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார். 

முன் அறிவிப்பு எதுவும் இல்லை என்றால் காவல்துறை தரப்பால் தகுந்த பாதுகாப்பு வழங்க முடியாமல் போகும் நிலை ஏற்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். 

முன்பு போலீஸ் தரப்பிடம் தெரிவிக்க சட்டம் வகை செய்யப்பட்டது. ஆனால் தற்போது பேரணியை நடத்துபவர்கள் எந்தவொரு அறிவிப்பையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் இதனால் போலீஸ் தரப்புக்கு பெரும் சவாலாக விளங்கும் என்று அமைச்சர் தனது அச்சத்தை வெளிப்படுத்தினார். 

அமைதியான முறையில் பேரணி நடத்த முன் கூட்டியே அறிவிப்பது அல்லது நோட்டீஸ் வழங்க அவசியமில்லை என்று கூட்டரசு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு சொன்னார். 

எதிர்வரும் ஜூலை 26ஆம் தேதி HIMPUNAN TURUN ANWAR பேரணி நடத்த எதிர்கட்சி தரப்பு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset