நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்காவுடன் வரி விவகார பேச்சுவார்த்தை தொடருகின்றது: தெங்கு ஜப்ருல் 

கோலாலம்பூர்:

25 விழுக்காடு இறக்குமதி வரி தொடர்பாக அமெரிக்காவுடன் இன்னும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஶ்ரீ ஜப்ருல் அப்துல் அஜிஸ் தெரிவித்தார். 

நாங்கள் இன்னும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது.

இந்த பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் பயனளிக்க வேண்டியது அவசியம் என்று 2025-ஆம் ஆண்டுக்கான சர்வதேசச் சுகாதார வார விழா நிகழ்ச்சியில் தெங்கு ஜப்ருல் செய்தியாளர்களிடம் இவ்வாறு  கூறினார். 

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியோனேசியா 19% இறக்குமதி வரி ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளதாக அறிவித்திருந்தாலும் அது குறித்து இந்தோனேடசிய அரசிடமிருந்து எந்தவொரு உறுதிபடுத்தல் தகவல் கிடைக்கப் பெறவில்லை என்றும் தெங்கு ஜப்ருல் சுட்டிக் காட்டினார்.

இந்தோனேசியாவின் அறிவிப்பிற்காகக் காத்திருப்போம் என்று தெங்கு ஜப்ருல் கூறினார்.

மலேசியா தற்போது 25% இறக்குமதி வரி விழுக்காட்டை எதிர்கொள்ளவுள்ளது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset