
செய்திகள் மலேசியா
கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் லாரி தீப்பிடித்து எரிந்தது கடுமையாக போக்குவரத்து நெரிசல்
காராக்
இன்று காலை கோலாலம்பூர்- காராக் (KL-Karak) நெடுஞ்சாலை ஒரு லாரி திடீரென தீப்பற்றியதையடுத்து, தலைநகர் நோக்கிச் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசலால் நிலைக் குலைந்தது.
இச்சம்பவம் காலை 7.24 மணியளவில் நிகழ்ந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் (செயல்பாடுகள்) அக்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
அவசர அழைப்பைப் பெற்றவுடன், ஒரு தீயணைப்பு வாகனம் மற்றும் 10 வீரர்களுடன் உடனடியாகக் களத்திற்கு சென்றதாக அவர் மேலும் சொன்னார்.
தீயணைப்புப் படையினர் காலை 8.08 மணிக்கு சம்பவ இடத்தை வந்தடைந்து, தீயை அணைக்கும் பணியைத் தொடங்கினர். எந்தவொரு உயிரிழப்பும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும், இச்சம்பவம் போக்குவரத்தில் பெரும் நெரிசலை ஏற்படுத்தியது.
குறிப்பாக இந்தப் பகுதியைத் தவிர்த்து மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு பயணிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தீப்பற்றியதற்கான காரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
August 31, 2025, 12:18 pm
ஈப்போவில் தேசிய தின கொண்டாட்டங்களை சீர்குலைக்க முயன்ற பெண் கைது
August 31, 2025, 12:13 pm
பிரதமர் அறிவித்த 100 ரிங்கிட் சாரா உதவித் தொகை இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது
August 31, 2025, 10:26 am
2025 சுதந்திர தின கொண்டாட்டங்கள் தேசிய கீதத்துடன் தொடங்கியது
August 31, 2025, 10:16 am
சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு மாமன்னர் புரோட்டோன் சத்ரியா நியோ காரை ஓட்டி வந்தார்
August 31, 2025, 9:56 am
2025 சுதந்திர தினத்தை காண 100,000 பேர் டத்தாரான் புத்ராஜெயாவில் திரண்டுள்ளனர்
August 30, 2025, 10:21 pm
சம்சுல் ஹரிஸின் உடல் பாதுகாப்பாக மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது
August 30, 2025, 9:56 pm
பகடிவதை என்பது நமது கலாச்சாரம் அல்ல: டத்தோஸ்ரீ சரவணன்
August 30, 2025, 2:49 pm