நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமர் அறிவித்த 100 ரிங்கிட் சாரா உதவித் தொகை இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த 100 ரிங்கிட் சாரா உதவித் தொகை இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு அடையாள அட்டை மூலம் 100 ரிங்கிட் சாரா உதவித் தொகை மக்களுக்கு வழங்கப்படும் என பிரதமர் அறிவித்தார்.

அவ்வகையில் ரஹ்மா அடிப்படை பங்களிப்பு உதவி இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது.

மேலும் 2025 டிசம்பர் 31 வரை நாடு முழுவதும் உள்ள 4,100 க்கும் மேற்பட்ட சாரா வணிக வளாகங்களில் செலவிடலாம்.

குறிப்பாக இது தேர்ந்தெடுக்கப்பட்ட 14 தயாரிப்பு வகைகளின் அடிப்படையில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு பொருந்தும்.

வாழ்க்கைச் செலவுகளின் சுமையைக் குறைப்பதற்கான உடனடி முயற்சியாகவும், மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இது அமைந்துள்ளது. 

இதன் மூலம் 22 மில்லியன் குடியிருப்பாளர்கள் 2 பில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset