நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2025 சுதந்திர தின கொண்டாட்டங்கள் தேசிய கீதத்துடன் தொடங்கியது

புத்ராஜெயா:

2025 சுதந்திர தின கொண்டாட்டங்கள் தேசிய கீதத்துடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

மலேசியா மடானி, மக்கள் நலன் காக்கப்படும் என்ற கருப்பொருளுடன் 2025 தேசிய தின கொண்டாட்டம் புத்ராஜெயாவில் இன்று காலை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

நாட்டின் 68ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்று காலை 8 மணிக்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், அரசியார் ராஜா ஜரித் சோபியா ஆகியோரின் வருகையுடன் இந்த நிகழ்வு தொடங்கியது.

மாமன்னர் தம்பதியர், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உட்பட அனைவரும்  பிரதான மேடைக்கு சென்ற பின் தேசிய கீதம் பாடப்பட்டது.

பின்னர் மாட்சிமை தங்கிய மன்னர் பிரதான மரியாதை அணிவகுப்பை ஆய்வு செய்தார்.

ஜாலூர் கெமிலாங் இசையுடன், 14 பீரங்கி குண்டுகளும் முழங்க, தேசிய கீதம் மீண்டும் ஒருமுறை எதிரொலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset