நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு மாமன்னர் புரோட்டோன் சத்ரியா நியோ காரை ஓட்டி வந்தார்

புத்ராஜெயா:

சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் புரோட்டோன் சத்ரியா நியோ காரை ஓட்டி வந்தார்.

நாட்டின் 68ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் புத்ராஜெயாவில் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

காலை 8 மணிக்கு தேசிய கீதத்துடன் இந்த சுதந்திர தின கொண்டாட்டம் தொடங்கியது.

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், அரசியார் ராஜா ஜரித் சோபியா ஆகியோர் புரோட்டோன் சத்திரியா நியோ காரில் அங்கு வந்தனர்.

இக்காரை மாமன்னார் ஓட்டி வந்து அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

மேலும் டத்தாரான் புத்ராஜெயாவில் கூடியிருந்த மக்கள் பலத்த ஆரவாரத்துடன் மாமன்னரை வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset