நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போவில் தேசிய தின கொண்டாட்டங்களை சீர்குலைக்க முயன்ற பெண் கைது

ஈப்போ:

ஈப்போவில் தேசிய தின கொண்டாட்டங்களை சீர்குலைக்க முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்.

பேரா மாநில போலிஸ் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் இதனை தெரிவித்தார்.

பேரா மாநில தேசிய தின கொண்டாட்டம் இன்று காலை நடைபெற்றது.

அப்போது பிரதான மேடையில் ஏறிய ஒரு பெண் சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காலை 8.20 மணிக்கு பேரா மாநில கீதம் இசைக்கப்பட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

சந்தேக நபர் மேடையின் பக்கவாட்டு வழியாக நுழைந்து, பேரா சுல்தான் சுல்தான் நஸ்ரின் முய்சுடின் ஷாவை அணுகினார்.

அதன் பின்னர் பணியில் இருந்த பாதுகாப்புப் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

41 வயதான உள்ளூர் பெண்ணான சந்தேக நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.

உடனே மேல் நடவடிக்கைக்காக அவர் போலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset