நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸ்ரீ கெம்பங்கான் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக அதிரடி சோதனை: 496 சட்டவிரோத குடியேறிகள் கைது

செர்டாங்:

ஸ்ரீ கெம்பங்கான் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக அதிரடி சோதனையில் 496 சட்டவிரோத குடியேறிகள் கைது ச்செய்யப்பட்டனர்.

குடிநுழைவுத் துறையின் செயல்பாட்டுப் பிரிவின்  துணை இயக்குநர் ஜப்ரி எம்போக் தாஹா இதனை உறுதிப்படுத்தினார்.

ஸ்ரீ கெம்பங்கனில் உள்ள புத்ரா பெர்மாய் செலேசா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள  ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இரவு 10 மணிக்கு தொடங்கிய இந்த சோதனையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பிம் இரண்டாவது மாடி உள்ள மூன்று வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட இணைய சூதாட்ட நடவடிக்கைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

அதிகாரிகள் சோதனை செய்வதை கடினமாக்கும் வகையில் அந்த வீடுகளில் சிசிடிவி, இரும்பு கதவுகள் பொருத்தப்பட்டிருப்பதை அதிகாரிக்ள் கண்டறிந்தனர்.

சிலாங்கூர், கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை, சுபாங் ஜெயா நகராண்மை கழகம், போலிஸ்படை, பொது  பாதுகாப்புப் படை,  தேசிய பதிவு இலாகா ஆகியவற்றைச் சேர்ந்த 217 அதிகாரிகள் இந்த சோதனை ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ளப்பட்டது.

அதிகாரிகளால் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க புலம்பெயர்ந்தோர் பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்தினர்.

இடிந்து விழும் வரை அதிக எண்ணிக்கையில் கூரையில் மறைந்திருந்தனர். மேலும் அவர்களில் சிலர் விழுந்து காயமடைந்தனர்.

நான்கு தொகுதிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தில் நடந்த நடவடிக்கையில் 741 வெளிநாட்டினரிடம் சோதனை நடத்தப்பட்டது.

இதில் பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் 496 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset