நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

3 முக்கிய மருத்துவமனைகளை மேம்படுத்துவதுடன் காலியிடங்களை நிரப்ப சுகாதார அமைச்சும் ஜொகூர் மாநில அரசும் ஒப்புதல்

புத்ராஜெயா:

ஜொகூரில் 3 முக்கிய மருத்துவமனைகளை மேம்படுத்துவதுடன் காலியிடங்களை நிரப்ப சுகாதார அமைச்சும்  மாநில அரசும் ஒப்புக் கொண்டுள்ளன.

ஜொகூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபீஸ் காசி  இதனை கூறினார்.

புத்ராஜெயாவில் சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ ஜூல்கில்ளி அகமதுவுடன் சந்திப்புக் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த சந்திப்பில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

குறிப்பாக மாநிலத்தில் உள்ள மருத்துவமனை உள்கட்டமைப்பு, ஊழியர்களின் நலனை வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டது.

இதன் அடிப்படையில்  மாநிலத்தில் உள்ள மூன்று முக்கிய மருத்துவமனைகளில் காலியிடங்களை நிரப்புதல், வசதிகளை மேம்படுத்துதல், வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான அவசரத் தேவை இருப்பதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.

சுல்தானா அமினா மருத்துவமனை, சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனை, கூலாய்  மருத்துவமனை  ஆகியவற்றின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் முயற்சிகளில் கூட்டம் கவனம் செலுத்தியதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset