
செய்திகள் மலேசியா
மாணவர்களுக்கான உலகின் சிறந்த நகரங்கள்: கோலாலம்பூருக்கு 12-ஆவது இடம்
கோலாலம்பூர்:
மாணவர்கள் கல்வி பயில உலகின் சிறந்த நகரங்களுக்கான தரவரிசையில் மலேசியாவின் தலைநகரம், கோலாலம்பூர் 12-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
2026-ஆம் ஆண்டுக்கான QS சிறந்த மாணவர் நகரங்கள் தரவரிசை நேற்று வெளியிடப்பட்டது.
90.3 மதிப்பெண்களுடன் கோலாலம்பூர் முதல் முறையாக உலகின் முதல் 20 சிறந்த மாணவர் நகரங்களில் இடம்பிடித்துள்ளது.
ஆசிய அளவில், சீனாவின் பெய்ஜிங், ஹங்காங் ஆகிய நகரங்களைப் பின்னுக்குத் தள்ளி கோலாலம்பூர் 4-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது
ஒரு முன்னணி உலகளாவிய கல்வி மையமாக கோலாலம்பூர் திகழ்வதாக QS நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Jessica Turner கூறினார்.
வாழ்க்கை முறை, வாழ்க்கை செலவீனங்கள், பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், வேலைவாய்ப்பு, பல்கலைக்கழக தரவரிசை, மாணவர் குரல் ஆகிய 6 கூறுகளைக் கொண்டு இந்தத் தரவரிசை மேற்கொள்ளப்பட்டது.
2026-ஆம் ஆண்டுக்கான உலகளவில் மாணவர்களுக்கான சிறந்த நகரத் தரவரிசையில் தென் கொரியாவின், சியோல் நகரம் முதலிடத்தையும் ஜப்பானின் தோக்கியோ நகரம் இரண்டாம் இடத்தையும், லண்டன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 17, 2025, 5:21 pm
2026-ஆம் ஆண்டு ஜனவரி முதல் இளைஞர் வயது வரம்பு 30 ஆகக் குறைப்பு: ஹன்னா இயோ
July 17, 2025, 4:48 pm
பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் பலாத்காரம் புரிந்த இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்
July 17, 2025, 4:36 pm
மலேசிய திறன் சான்றிதழ் வாயிலாக திவேட் பயிற்சிக்கான புரட்சி தொடரும்: ஸ்டீவன் சிம்
July 17, 2025, 4:35 pm
அனைவரும் கோலாலம்பூர் நகரத்தின் தூய்மையைப் பராமரிக்க வேண்டும்: ஜலிஹா முஸ்தாஃபா
July 17, 2025, 4:01 pm
கிளந்தானில் ஓரின சேர்க்கை (Gay) விருந்து: மாநில மரியாதையை களங்கப்படுத்திய செயல்: அம்னோ
July 17, 2025, 3:52 pm