நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

ஜாம்பியா வர்த்தக மாநாட்டில் பங்கேற்றுள்ள  மலேசிய நிறுவனங்கள் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்கின்றன

லுசாகா -

ஜாம்பியா வர்த்தக மாநாட்டில் பங்கேற்றுள்ள மலேசிய நிறுவனங்கள் அங்குள்ள முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றன.

ஷாம்பியா வர்த்தக மாநாட்டில் ஜூலை 14 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை லுசாகாவில் நடைபெறுகிறது.

இம்மாநாட்டில் ஆறு மலேசிய நிறுவனங்களைச் சேர்ந்தௌ 15 பிரதிநிதிகள் அடங்கிய குழு பங்கேற்றுள்ளது.

இக்குழு  தென் ஆப்பிரிக்க நாடுகளில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறது.

மை ஈவென்ட்ஸ்  நிறுவனத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு மலேசியாவில் உள்ள ஷாம்பியா தூதரகம், மாட்ரேட், ஜிம்பாப்வேயில் உள்ள மலேசிய தூதரகம்,  ஒருங்கிணைந்த ஜாம்பியா மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றிலிருந்து ஆதரவு கிடைத்துள்ளது.

மலேசியாவிலிருந்து வந்த இந்த மதிப்புமிக்க தூதுக்குழுவை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

அதே வேளையில் மை ஈவென்ட்ஸின் முயற்சியைப் பாராட்டுகிறோம் என்று வர்த்தகம், தொழில்துறை அமைச்சின் நிரந்தர செயலாளர் லிலியன் ப்வால்யா கூறினார்.

இந்த பணி நடைபெறுவதை உறுதி செய்வதில் மலேசியாவிற்கான ஜாம்பியா தூதர் மோர்கோம் மும்பா முக்கிய பங்கு வகித்தார்.

மேலும் மலேசியா பிரதிநிதித்துவத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் சீராக இருப்பதை உறுதி செய்தார்.

குறிப்பாக வணிகத்திற்காக மட்டுமல்லாமல் சுற்றுலாவிற்கும் சமமாக ஜாம்பியாவை ஆராய வேண்டும் என்று மலேசிய நிறுவனங்களுக்கு அவர் வலியுறுத்தினார்.

சுரங்கம், விவசாயம், எரிசக்தி, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரந்த வாய்ப்புகளுடன் ஷாம்பியா ஒரு நிலையான,  கவர்ச்சிகரமான முதலீட்டு சூழலை வழங்குகிறது.

ஷாம்பியா மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் ஆல்பர்ட் ஹல்வாம்பா இதனை கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset