நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய ஊடக மன்றத்தின் முதல் வாரிய உறுப்பினர்களாக 12 பேர் நியமனம்

கோலாலம்பூர்:

மலேசிய ஊடக மன்றத்தை (MMC) வழி நடத்த 12 வாரிய உறுப்பினர்கள் இன்று நியமிக்கப்பட்டதாக தகவல் தொடர்பு அமைச்சு அறிக்கையில் தெரிவித்தது. 
 
இவர்கள் மலேசிய ஊடக மன்றச் சட்டம் 2025-த்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்த மன்றம் மலேசிய மடானி நோக்கத்தின் கீழ் ஊடகச் சுதந்திரத்தைக் காக்கும் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.

அதுமட்டுமல்லாமல், அனைத்து மலேசியர்களும் துல்லியமான, தகவல்களை அணுகக்கூடிய வாய்ப்பு பெறுவதை உறுதிப்படுத்தவும் இந்த மன்றம் அமைக்கப்பட்டது என தகவல் தொடர்பு அமைச்சு அறிக்கையில் தெரிவித்தது. 

இன்று புத்ராஜெயாவில் நடந்த நிகழ்ச்சியில், தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில், 12 மன்ற உறுப்பினர்களில் ஆறு பேருக்கு நியமனக் கடிதங்களை வழங்கினார்.

பத்திரிகை, ஊடகம், கல்வித்துறை மற்றும் தகவல் தொடர்பு ஆகியத் துறைகளில் அனுபவம் மற்றும் பங்களிப்புகளின் அடிப்படையில் மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset