நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆப் மெட்டல் சோதனையில் 183 மில்லியன் ரிங்கிட் சொத்துக்கள் பறிமுதல்: 51 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வங்கி கணக்குகள் முடக்கம்

கோலாலம்பூர்:

ஆப் மெட்டல் சோதனை நடவடிக்கையில் கிட்டத்தட்ட 183 மில்லியன் ரிங்கிட் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நேற்று முதல் ஐந்து மாநிலங்களில் உலோகப் பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதில்  பல நிறுவன நடவடிக்கையில் 183 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களைக் கைப்பற்றியுள்ளது.

எம்ஏசிசி, சுங்கத்துறை, உள்நாட்டு வருவாய் வாரியம், பேங்க் நெகாரா உள்ளடக்கிய ஒரு சிறப்புப் பணிக்குழுவால்,

எட்டு சொத்துடமைகள், ஆறு சொகுசு வாகனங்கள்,  ஐந்து பிராண்டட் கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும்  சுமார் 51 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 45 நிறுவனக் கணக்குகள், 82 தனிப்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்கப்பட்டது.

எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அசாம் பாக்கி இந்த பறிமுதல், முடக்கத்தை உறுதிப்படுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset