நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

950 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான ஏற்றுமதி வரி வருவாய் இழப்பு: பழைய இரும்பு பொருள் கடத்தல் நடவடிக்கை முறியடிப்பு

ஜார்ஜ்டவுன்:

கிட்டத்தட்ட 950 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான ஏற்றுமதி வரி வருவாய் இழப்புக்கு காரணமான பழைய இரும்பு பொருள் கடத்தல் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.

பழைய இரும்பு பொருட்களுக்கு 15 சதவீதம் ஏற்றுமதி வரியை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது.

ஆனால் இந்த வரியை செலுத்தாமல் இந்த பொருட்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகிறது.

நாட்டின் ஐந்து மாநிலங்களில் இக்கும்பல் இந்த கடத்தல் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதனால் கடந்த ஆறு ஆண்டுகளில் 950 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான ஏற்றுமதி வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட கும்பல், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதைத் தவிர்க்க அமலாக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் நம்பப்படுகிறது.

இருப்பினும் எம்ஏசிசி அதிகாரிகள் காலை 6 மணிக்கு தொடங்கி ஒரே நேரத்தில் ஐந்து மாநிலங்களில் இக்கும்பல் மீது சோதனை நடத்தியது.

எம்ஏசிசி  சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் கீழ் சுங்கத்துறை,  உள்நாட்டு வருவாய் வாரியம்,  பேங்க் நெகாரா ஆகியவற்றுடன் இணைந்து இச்சோதனை நடத்தப்பட்டது.

பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், ஜொகூர், கெடா ஆகிய இடங்களில் 19 இடங்களில் ஆபரேஷன் ஆப் மெட்டல்  கீழ் மேற்கொள்ளப்பட்டன.

பினாங்கில் உள்ள ஓர் உரிமையாளருக்கு சொந்தமான வீடுகள், நிறுவனங்களைச் சுற்றியுள்ள இடங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset