நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இல்லற வாழ்க்கை கருத்தரங்கின் நிறுவனர், கணவர் போலிசாரால் கைது செய்யப்பட்டனர்

பெட்டாலிங்ஜெயா:

இல்லற வாழ்க்கை கருத்தரங்கின் நிறுவனரும்  அவரது கணவரும் இன்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் வாக்குமூலம் அளித்த பிறகு கைது செய்யப்பட்டனர்.

இதனை  அவர்களது  வழக்கறிஞர் டத்தோ எம் ரெசா ஹாசன் உறுதிப்படுத்தினார்.

அவர்கள் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 294,  தண்டனைச் சட்டத்தின் பிரிவு 509,  சிறு குற்றச் சட்டம் 1955 இன் பிரிவு 14 இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பெட்டாலிங் ஜெயா  மாவட்ட்  போலிஸ் தலைமையகத்தில்  அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

அதன் பிறகு ஷாஆலம் போலிஸ் தலைமையகத்தின் ஒரு போலிஸ் குழுவால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், ஷாஆலம் மாவட்ட போலிஸ்  தலைமையகத்தின் உதவி ஆணையர் முகமட் இக்பால் இப்ராஹிம் இருவரின் கைது குறித்து உறுதிப்படுத்தினார்.

பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பிறகு கைது தொடர்பான கூடுதல் தகவல்கள் வரும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset