நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீதித்துறை சர்ச்சையில் சிக்கியுள்ள நீதிபதியை பரிந்துரைக்க வேண்டாம்: பிரதமருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்து

புத்ராஜெயா:

நீதித்துறை சர்ச்சையில் சிக்கியுள்ள நீதிபதியை பரிந்துரைக்க வேண்டாம் என்று பிரதமருக்கு  நம்பிக்கை கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று நம்பிக்கை கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் மிக உயர்ந்த நீதித்துறை பதவிக்கு ஒரு மூத்த நீதிபதியை பரிந்துரைக்க வேண்டாம் என பிரதமரை வலியுறுத்தியுள்ளனர்.

புத்ராஜெயாவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட சில தகவலறிந்த   வட்டாரங்கள் இதனை தெரிவித்தன.

இருப்பினும், நீதித்துறை தலையீடு குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள நீதிபதி ஆட்சியாளர்கள் மாநாட்டிற்கு சமர்ப்பித்த பெயர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளாரா என்பதை பிரதமர் வெளியிடவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset