நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹரக்கா மீது புகார் – அன்வார் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பாக PKR நடவடிக்கை

புத்ராஜெயா:
பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக ஹரக்கா டெய்லி வெளியிட்ட கட்டுரை, அவதூறுகளை உள்ளடக்கமாக கொண்டதாகக் கூறி, புத்ராஜெயா பிகேஆர் எனப்படும் மக்கள் நீதி கட்சி போலீசில் புகார் செய்துள்ளது.

இந்த கட்டுரை மக்களைக் கிளர்ச்சிக்குத் தூண்டக்கூடியது என்றும்,
சட்டப்பிரிவு 124B மற்றும் இதற்கு பொருத்தமான சட்டத்தின் கீழ் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் புத்ராஜெயா பிகேஆர் துணைத் தலைவர் ஷாரிப் ஜீவ் வலியுறுத்தினார்.

ஜூலை 26 நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டம் அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கு ஆபத்தாக இருக்கலாம் என்றும்,
இதுவரை நாடு முழுவதும் 52 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

“ஆர்ப்பாட்டம் டத்தாரன் மெர்டேக்கா பகுதியில் நடத்த வேண்டாம்.
அங்கு கட்டுப்பாடுகள் மீறப்படலாம்,” என போலீசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

 அன்வார் பிரதமர் பதவிலிருந்து விலக வேண்டுமென்பதற்காக பெரிக்கத்தான் நேஷனல் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கின்றது. அண்மையில் இதற்கு ஆதரவாக ஷா ஆலம் பகுதியில் கடந்த வாரம் ஒன்றுக்கூடல் நடந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset