நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலோக கடத்தல் : NationGate நிறுவனத்தில் ஊழல் தடுப்பு ஆணையம் சோதனை

கோலாலம்பூர், 
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) உலோக பொருட்கள் கடத்தல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து நெஷன்கேட் சொலுஷன்  (NationGate Solution) நிறுவனத்தின் அலுவலகத்தில் கடந்த திங்கள் அன்று சோதனை மேற்கொண்டது.

இந்த நிறுவனம், NationGate Holdings Bhd நிறுவனத்தின் முழுமையான உடன்பங்குடையதாகும். இச்செய்தி, இன்று மலேசிய பங்குச் சந்தைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

“இந்த குற்றச்சாட்டுகளை நிறுவனம் மிகவும் முக்கியமாகக் கருதி,
ஊழல் தடுப்பு ஆணையத்துடன் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி, விசாரணையின் நம்பிக்கையை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,”என நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வணிக நடவடிக்கைகள் வழக்கம்போலவே தொடரும் என்றும்,
‘தற்காலிக பாதுகாப்பு நடவடிக்கைகள்’ மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், “Bursa Malaysia-வின் பட்டியலிடல் விதிமுறைகளுக்கும், உள்ளகச் சட்டங்களுக்கும் ஏற்ப எதிர்கால அறிவிப்புகள் வெளியிடப்படும்,” எனவும் நேஷன்கேட் கூறியுள்ளது

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தற்போது ஸ்க்ராப் மெட்டல் கடத்தல் செயலில் ஈடுபட்டுள்ள பெரும் குற்றவாளிகளை நோக்கி விரிவான சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது என பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த குற்றவியல் நடவடிக்கைக்கு, சட்ட விரோதமான ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு வசதியாக சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

இந்தக் கடத்தல் நடவடிக்கைகள் மூலம், அரசுக்கு 950 மில்லியன் ரிங்கிட் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த சோதனைகள் ஐந்து மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களை குறிவைத்து நடைபெறுவதாக ஊழல் தடுப்பு தலைமை ஆணையர் அசாம் பாக்கி,உறுதிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset